பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மிகவும் பிரபலமானவர் மணிமேகலை. பெற்றோரை எதிர்த்து, தன்னுடைய காதலர் ஹுசைன் என்பவரை, கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும், தொகுப்பாளினியாக இவருந்த இவர், சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் & மிசஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார்.

இதை தொடர்ந்து தற்போது யாரும் எதிர்பாராத புதிய அவதாரம் எடுத்துள்ளார் மணிமேகலை. அதாவது அவர் முதல் முறையாக ஒரு பட்டி மன்ற பேச்சாளராக உருவெடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்... "நான் பட்டிமன்ற பேச்சாளர் ஆயிட்டேன். உலகெங்கும் தமிழை வளர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகித்த, வரலாற்று சிறப்பு மிக்க "மதுரை" மாநகரில் என்னுடைய முதல் பட்டிமன்றம் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. நல்ல வரவேற்பு கொடுத்த மக்களுக்கு நன்றி. மறக்க முடியாத சிறந்த அனுபவம் என கூறியுள்ளார்.

இதற்க்கு ரசிகர்கள் பலர் மணிமேகலைக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

View this post on Instagram

நான் பட்டிமன்ற பேச்சாளர் ஆயிட்டேன் 🎉🕺 உலகெங்கும் தமிழை வளர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகித்த, வரலாற்று சிறப்பு மிக்க "மதுரை" மாநகரில் என்னுடைய முதல் பட்டிமன்றம் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி 💛நல்ல வரவேற்பு கொடுத்த மக்களுக்கு நன்றி 🙏 மறக்க முடியாத சிறந்த அனுபவம் ☺️ (eppadiyo pesi thappuchutanda saamy 😺 ) Will upload the video soon 🙌

A post shared by Mani Megalai (@iammanimegalai) on Jun 1, 2019 at 2:53am PDT