மாநாடு ட்ரைலரை 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளதற்கு சிம்புவின் ரசிகர்களே காரணம் என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
சிம்புவின் கால்ஷீட் பிரச்சனையால் நீண்ட நாட்கள் தடைபட்ட படப்பிடிப்பால் டுப்பான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தை கைவிடுவதாக அறிவித்திருந்தார். பின்னர் முக்கிய புள்ளிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு மாநாடு மீண்டும் துவங்கியது. திரையுலகிற்கு வந்த நாளிலிருந்து முதல் முறையாக ஈஸ்வரன் படபிடிப்பில் மட்டுமே குறித்த நேரத்த சிம்பு கலந்து கொண்டுள்ளார் என சொல்லப்பட்ட நிலையில், அதன் தொடர்சியாக மாநாடு படத்தின் படப்பிடிப்பையும் முறையாக முடித்து கொடுத்துள்ளார் சிம்பு.
பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படம் ஒரு வழியாக திரையிட தயாராகியுள்ளது. மாநாடு படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே சூர்யா, பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா, கருணாகரன், எஸ்.ஏ சந்திரசேகர், உதய உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம்.நாதன் கவனித்து வருகிறார்.
இந்த படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் நினைத்தபடி படம் ஆகவில்லை. இதனால் கடுப்பான சிம்புவின் தயார் இது மைக்கேல் ராயப்பன் மற்றும் பலரது சதி, தீபாவளிக்கு மாநாடு வெளியாகவில்லை என்றால் முதல்வர் வீட்டு முன் உண்ணாவிரம் இருப்பேன் என சிம்புவின் தாயார் போராட்டத்தில் குதித்திருந்தார்.
ஆனாலும் அண்ணாத்த,எனிமி என இரண்டு படங்கள் தீபாவளியை முன்னிட்டு திரை கண்டா காரணத்தால் மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைப்பட்டது. வரும் நவம்பர் 25-ம் தேதி மாநாடு திரை காணும் என சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். அதோடு இந்த படம் படத்தின் விநியோக உரிமையை எஸ்எஸ்ஐ புரொடக்ஷன்ஸ் வாங்கியுள்ளது. அனைத்து ஏரியாக்களும் விற்பனையாகிவிட்டது. நேற்று மாநாடு படத்தை பார்த்த சென்சார் குழுவினர் இந்த படத்திற்கு யு/ஏ சான்று வழங்கி உள்ளனர்.
இந்த படத்தில் டீசர், டிரைலர், ஃபஸ்ட்லுக், ஃபஸ்ட் சிங்கிள் என அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் சமீபத்தில் மாநாடு படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியிடப்பட்டது. இது 10 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு ; ப்ரீ ட்ரைலரை வெற்றி பெற செய்த சிம்பு ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்தள்ளார்.
