the lead director waiting to kept check for ajith

அஜித்துக்காக ஆப்பு என்ற கதையை ரெடியாக வைத்துள்ளதாக ப்ரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது முகநூல் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

தமிழில், நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ப்ரேமம் படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ், கன்னடம் என தென்னிந்திய ரசிகர்களை திரையரங்குக்கு கட்டி இழுத்தது.

மலையாளத்தில் முன்னணி இயக்குனரான இவர், சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் எப்போதுமே ரசிகர்களுடன் ட்ச்சில் இருப்பவர்.

இந்நிலையில் ஃபேஸ்புக்கில் ரசிகர்களுடனான சாட்டிங்கில், அஜித் ரசிகர் ஒருவர் தல அஜித்தை வைத்து எப்போ படம் பண்ண போறீங்க என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த இயக்குனர் அல்போன்ஸ் ''சென்னையில் படிக்கும் போது நானும், என்னோட நண்பனும் அவர் வீட்டு வாசலில் பல மணி நேரம் காத்திருந்தோம் ஆனால் இன்று வரை அவரை பார்க்க முடியவில்லை, கண்டிப்பாக அவருக்காக ஒரு கதையை தயார் செய்வேன்'' என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல தல அஜித்திற்காக 'ஆப்பு' என்ற ஆக்ஷன் கதையை ஒன்றை வைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.