ஃபேஸ்புக் லைவில் பேசிக்கொண்டிருக்கும் போதே..! தற்கொலைக்கு முயன்ற நடிகரால் பரபரப்பு..!

தி கபில் சர்மா நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் தீர்த்தானந்த ராவ் ஃபேஸ்புக் லைவில் ரசிகர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

The Kapil Sharma Show actor Tirthanand Rao suicide attempt

தி கபில் சர்மா ஷோ மற்றும் வாக்லே கி துனியா போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றியதன் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர், தீர்த்தானந்த ராவ். இவர் நடிகர் நானா படேகரை போலவே மிமிக்ரி செய்வதில் வல்லவர் என்பதால் இவரை ரசிகர்கள், ஜுனியர் நானா படேகர் என அழைப்பது உண்டு.

இந்நிலையில் இவர் ரசிகர்களுடன் பேசிக்கொண்டே இருக்கும் போது, திடீர் ஒரு வித ஆத்திரத்திலும், விரக்தியிலும் பேசினார். அப்போது தன்னுடைய இந்த நிலைக்கு காரணம் ஒரு பெண் தான் என்றும், அவர் தன்னை மிரட்டி 3 முதல் 4 லட்சம் வரை பணம் பறித்துள்ளார். அவரால் நான் ஒரு கடனாளியாக நிர்கதியாக நிற்கிறேன் என கதறினார்.

ஒன்ஸ் மோர்... கமல்ஹாசன் படத்தில் இணையும் மாஸ் நடிகர்? சுட சுட வெளியான தகவல்!

தொடர்ந்து பேசிய அவர், அந்த பெண் தன்னை பற்றி மகளிர் காவல் நிலயித்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது இப்போது வரை எனக்கு தெரியாது. அந்த பெண் எனக்கு அறிமுகமாகி ஒரு வருடம் கூட ஆகவில்லை, என ஆத்திரம் பொங்க பேசி கொண்டிருந்த, தீர்த்தானந்த ராவ் திடீர் என தனக்கு பக்கத்தில் வைத்திருந்த ஏதோ விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

The Kapil Sharma Show actor Tirthanand Rao suicide attempt

18 வயதில் காதல்! அந்த விஷயத்துக்கு ஓகே.. பட் இந்த இரண்டும் வேண்டாம்! காதலருக்கு கண்டீஷன் போட்ட பிரியா பவானி!

பின்னர் இந்த சம்பவம் குறித்து ரசிகர்கள் சிலர், அவர் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்...சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்... சுயநினைவின்றி விழுந்து கிடந்த நடிகரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் தற்போது தீர்த்தானந்த ராவ் நலமுடன் உள்ளதாக கூறப்படுகிறது. தீர்த்தானந்த  ராவ் கொரோனா காலத்தில் நிதி நெருக்கடி காரணமாக, தற்கொலைக்கு முயன்றார் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios