The Gray Man : நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ஜகமே தந்திரம், அட்ரங்கி ரே, மாறன் ஆகிய மூன்று படங்கும் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தன. 

நடிகர் தனுஷ், தற்போது பான் வேர்ல்டு ஸ்டாராக வலம் வருகிறார். ஆரம்பத்தில் கோலிவுட் படங்களில் மட்டும் நடித்து வந்த நடிகர் தனுஷ், ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் அங்கு ஷமிதாப், அட்ரங்கி ரே போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ என்கிற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார்.

இப்படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து வியந்து போன அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ், தனுஷுக்கு தாங்கள் இயக்கும் தி கிரே மேன் படத்தில் நடிக்க வாய்ப்பளித்தனர். இதையடுத்து கடந்தாண்டு அமெரிக்காவில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டு அப்படத்தில் நடித்து முடித்தார் தனுஷ்.

Scroll to load tweet…

தி கிரே மேன் படத்தின் பின்னணி பணிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், தி கிரே மேன் படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகளின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை நேற்று வெளியிட்ட படக்குழு, அதனுடன் இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்தது. அதன்படி தி கிரே மேன் திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 28-ந் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ஜகமே தந்திரம், அட்ரங்கி ரே, மாறன் ஆகிய மூன்று படங்கும் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தன. இவ்வாறு ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த தனுஷுக்கு தி கிரே மேன் திரைப்படம் வெற்றியைக் கொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... Priyanka Deshpande : ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சமா...! தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Scroll to load tweet…