The first day was an started four army in bigboss 2
கடந்த ஆண்டை விட, தற்போது துவங்கப்பட்டுள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பு இருக்கிறது. காரணம் ஒரே நாளில், தங்களுக்கு பிடித்த நான்கு நடிகைகளுக்கு ரசிகர்கள் ஆர்மியே துவங்கி விட்டனர். இதையெல்லாம் பார்க்கும் போது பிக்பாஸ் முதல் சீசனை விடை இரண்டாவது சீசனுக்கு மிகப்பெரிய வரவேற்ப்பு இருப்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது.
சென்ற வருடம் பல ரசிகர்கள் மனதைக் கொள்ளக்கொண்ட நாயகி, ஓவியாவிக்கு கூட அவரை பற்றியும் அவருடைய நல்ல குணாதிசயத்தை புரிந்துக்கொண்ட பின்பு தான் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் இந்த வருடம், போட்டியாளர்கள் உள்ளே வந்த உடனேயே அவர்களுக்கு ஆர்மி துவங்கியுள்ளனர் சில ரசிகர்கள். அந்த வகையில் தற்போது, நடிகை யாசிக்க, ஜனனி ஐயர், ரித்விகா, மற்றும் மும்தாஜ் ஆகியோருக்கு ஆர்மி துவங்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது துவங்கப்பட்டுள்ள ஆர்மிகளில், நடிகை யாசிகாவிற்கு தான் அதிக ஃபலோவர்ஸ் உள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் 2-ல் பங்கேற்றுள்ள பிரபலங்களில் மிகவும் இளமையானவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும் ஒவியாவின் ஆர்மி ஃபலோவர்சை மிஞ்ச முடியாது என மற்ற ஆர்மி ரசிகர்களுக்கு ஓவியா ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
