மெர்சல்:

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் இரண்டாவது முறையாக நடித்து, கடந்த ஆண்டு பல்வேறு சர்ச்சைகளை கடந்து வெளியான திரைப்படம் 'மெர்சல்'. இந்த படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடித்திருந்தார். அதே போல் இவருக்கு கதாநாயகிகளாக, சமந்தா, காஜல் அகர்வால், நித்திய மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாவதற்கு, முன்பு தான் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது என்றால். வெளியான பிறகும் இதில் GST, டிஜிட்டல் இந்தியா என தேசிய கட்சிக்கு எதிராக வசனங்கள் உள்ளதாக பல எதிர்ப்புகள் வந்தது. இருப்பினும் இந்த திரைப்படம் விஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. 

தயாரிப்பாளருக்கு நஷ்டம்:

மெர்சல் திரைப்படம் வெற்றி பெற்றாலும், வசூல் சாதனை படைத்தாலும் இயக்குனர் அட்லீயால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ள அம்மா கிரியேஷன் டி.சிவா, தேனாண்டாள் நிறுவனத்திற்கு இயக்குனர் அட்லீயால் தான் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சொன்ன தேதியில் படத்தை முடிக்காமல் பல கோடிகளை இழந்துவிட்டார். குறிப்பாக 90 கோடியில் என்று பட்ஜெட் சொல்லி 130 கோடி வரை பட்ஜெட் செலவழிந்து விட்டது. இதற்கான ஆவணங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளது என்றும் இனி அட்லீக்கு எந்த ஹீரோவும் படம் கொடுக்க கூடாது என கோபமாக கூறியுள்ளார்.