Asianet News TamilAsianet News Tamil

எங்க ஹீரோ சிவாவின் அபரிமிதமான வளர்ச்சிதான் முக்கியமான காரணம்.... சீன் போடும் சீமராஜா கேங்!

the film team explain about sivas Semaraja
the film team explain about siva's Semaraja
Author
First Published Jul 21, 2018, 12:35 PM IST


சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சிம்ரன், யோகி பாபு ஆகியோர் பலரது நடிப்பில், இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சீமராஜா. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் 13ம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது, சுதந்திர தினத்தில்  வரும் ஆகஸ்ட் 15ம் தேதி  வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

ஒரு படத்தை மார்க்கெட்டிங் செய்யும்போது மிக முக்கியமான ஒரு விஷயம் படத்தை எப்படி மக்கள் முன் நிலைநிறுத்துகிறோம் என்பது தான். 24ஏஎம் ஸ்டூடியோஸ் .ராஜா நவீன மார்க்கெட்டிங் மற்றும் வர்த்தகத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு தயாரிப்பாளர். அவர் தனது திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார்.

அந்த வகையில் சமீபத்திய முயற்சியாக தங்களது பெருமைமிகு படைப்பான ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துகிறார் ஆர் டி ராஜா. ஆகஸ்டு 3ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த இசை விழாவை மிகப்பெரிய வெற்றியாக மாற்ற மொத்த குழுவும் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.

the film team explain about siva's Semaraja

மதுரை தமிழ்த் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம். இங்குள்ள ரசிகர்கள் சினிமாவுக்கு அளிக்கும் அன்பும், ஆதரவும் நம்ப முடியாதது. நாங்கள் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் தான் நடத்துவது என்பதில் தீர்மானமாக இருந்தோம். எங்கள் ஹீரோ சிவகார்த்திகேயனின் அபரிமிதமான வளர்ச்சியும், இந்த முடிவுக்கு மிக முக்கியமான ஒரு காரணம்.

the film team explain about siva's Semaraja

மேலும், இந்த படத்தின் மையக்கதை, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியின் கிராமப்புறங்களை அடிப்படையாகக் கொண்டது. அதனால் இசை விழா நிகழ்ச்சியை மதுரையில் நடத்த, மனப்பூர்வமாக முடிவு செய்தோம். ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியை ஒரு பெரிய வெற்றியாக மாற்றுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்” என்று தன்னம்பிக்கையோடு கூறுகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios