The film has shown another face of repression - said director Vetrimaran ...
“களத்தூர் கிராமம்” அடக்குமுறையின் மற்றொரு முகத்தை காட்டியிருக்கிறது என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
நல்ல படங்களை எப்போதும் தமிழ் திரையுலக ரசிகர்கள் அங்கீகரிக்க தவறியதே இல்லை.
அந்த வகையில் தமிழ் திரையுலக ரசிகர்களும், ஆர்வலர்களும் ஆதரித்தும் பாராட்டியும் உள்ள படம் “களத்தூர் கிராமம்”.
இளையராஜா இசையில் கிஷோர் நடித்துள்ள படம் ‘களத்தூர் கிராமம்’.
இது சிறந்த கதைக்களம், கச்சிதமான திரைக்கதை, வாழ்வியல் பதிவு என பல்வேறு பாராட்டுகளை பெற்று வருகின்றது.
இந்த நிலையில், “அடக்குமுறையின் மற்றொரு முகத்தை காட்டியிருக்கிறது களத்தூர் கிராமம்” என்று இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
திரையரங்கு கிடைக்காமலும், தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை நிறுத்தம் காரணமாகவும் இரண்டுமுறை இந்தப் படம் தள்ளிப்போனது
ஆனால், ஒருவழியாக தற்போது வெளியாகி பாசிட்டிவான கருத்துகளை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று இப்படத்தின் தயாரிப்பாளர் சீனுராஜ் கூறியுள்ளார்.
