The famous Danes Master now stunt Master ...
புகழ்பெற்ற டேன்ஸ் மாஸ்டரான பிரபு தேவா, தற்போது நடித்து வரும் யங் மங் சங் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தேவி படத்திற்கு பிறகு தற்போது யங் மங் சங் படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி, கருப்பு ராஜா வெள்ள ராஜா என்ற படத்தையும் பிரபுதேவா இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் யங் மங் சங் படத்தில் பிரபுதேவா ஒரு ஸ்டண்ட் மாஸ்டராக நடிக்க உள்ளார். இதற்காக பிரத்யேகமாக அவர் குங்ஃபூ கற்றுக் கொள்ள உள்ளாராம்.
“யங் மங் சங் படம் 1987-ஆம் காலகட்டத்தில் நடிக்கக் கூடியது. அந்த காலகட்டத்தில் புரூஸ் லீ, ஜாக்கிசான், ஜெட் லீ போன்ற தற்காப்பு நாயகர்களின் படங்கள் வெளியாகி பெரும் வெற்றி பெற்றன.
அந்த படங்களின் ரசிகரான கதாநாயகனின் வாழ்க்கையை நகைச்சுவையோடு கலந்து யங் மங் சங் உருவாகி வருகிறது.” என படத்தின் இயக்குநர் எம்.எஸ்.அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் பிரபுதேவாவுடன், ஆர்.ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
