The controversy created by Vijay fans through posters
விரைவில் வரவிருக்கும் இளைய தளபதி விஜய் பிறந்த நாளை வரவேற்கும் விதத்தில், அவருடைய ரசிகர்கள் ஒட்டியிருக்கும் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. பல வருடங்களாக அரசியலில் கால் பதிக்கலாமா...? வேண்டாமா...? என யோசித்துக்கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய அரசியல் பயணம் குறித்து அறிவித்தார்.
அதே போல் நடிகர் கமல்ஹாசனும் யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் அரசியல் வருகை குறித்து அறிவித்து, தற்போது அரசியல் பணிகளிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அரசியலில் மேலும், பரபரப்பை ஏற்படுத்தும் விதத்தில், அமைத்துள்ளது மதுரையின் முக்கிய பகுதியில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
இந்த போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ள வாக்கியங்கள் பலருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்த போஸ்டர்களில் "தத்தளிக்கும் தமிழ்நாடே இனி தளபதியை நாடு" உள்ளிட்ட பல அரசியல் வசங்கள் அச்சிடப்பட்டுள்ளது. இதனால் இதை பார்த்தவர்களுக்கு விஜய் அரசியலில் குதிக்கப்போகிறாரா என்ற சந்தேகமே வந்துவிட்டது.
இதே போல் அஜித்தின் பிறந்த நாளுக்கும், அஜித் ரசிகர்கள் போஸ்டர்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
