உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கோரோனோ வைரஸ் தற்போது பரவலாக தமிழகத்திலும் பரவ துவங்கியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 36 பேருக்கு கோரோனோ வைரஸ் உறுதி செய்யப்பட்டு, அவர்களை தனிமைபடுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

எதிர்பார்த்ததைவிட நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள், அனைவரையும் வீட்டின் உள்ளேயே இருக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் வீடுகளில்  தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது வீடுகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்களால் ஸ்டிக்கர் ஒட்டி வருகிறார்கள். 

நடிகர் சேதுவின் இறுதி ஊர்வலத்தில் தலையில் அடித்து கொண்டு கதறியபடி உறவினர் சொன்ன விஷயம்!

அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அவரது எல்டாம்ஸ் சாலை வீட்டின் முன் நோட்டீஸ் ஒட்டிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நோட்டீஸில் ’மார்ச் 10 முதல் ஏப்ரல் 4 வரை கொரோனாவில் இருந்து எங்களையும் சென்னையையும் காக்க நாங்கள் தனிமைப்படுத்தி கொண்டுள்ளோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நடிகர் கமல் கொரோனா வைரஸ் பாதிப்பால் தனிமை படுத்தப்பட்டுள்ளார் என்கிற வதந்தி வைரலாக பரவியது.

கொஞ்சம் விட்ட ஓவரா போறீங்க... கடுப்பில் கொந்தளித்தாரா ஸ்ருதிஹாசன்?

இதனால் நடிகர் கமலஹாசன் பதறியபடி, தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், கடந்த 2  வாரங்களாகவே தான் தலைமையில் தான் உள்ளேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த குழப்பம் நடிகை கௌதமின் பாஸ்போர்ட்டால் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகை கௌதமி சமீபத்தில் வெளிநாட்டிற்கு சென்று வந்துள்ளார்.  இவருடைய பாஸ்போட்டில், நடிகர் கமலஹாசனின் எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டின் முகவரி இடம் பெற்றதால், கமலின் வீட்டில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனை உறுதி படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.