பிரபல நடிகரும் தோல் மருத்துவருமான, சேது நேற்றைய முன் தினம் இரவு திடீர் என ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். 36 வயதே ஆகும் இவர் இளம் வயதிலேயே மரணமடைந்தது திரையுலகினரை மட்டும் இன்றி இவருடைய ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இவருக்கு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் நண்பர்களாக இருந்த போதிலும், இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக நடிகர் சேதுவின் நண்பரும், பிரபல நடிகருமான சந்தானம், சேதுவின் உடல் இறுதி ஊர்வலம் வரை அங்கேயே இருந்தார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியது.

மேலும்  சேதுவின் உடல் நேற்று நல்லடக்கம் செய்ய ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட போது, அவருடைய உறவினர் ஒருவர் தலையில் அடித்து கொண்டு, அவனுக்கு ஆடி காரும், பென்ஸ் காரும் தானே பிடிக்கும் இப்படி ஆம்புலன்ஸில் அவனை ஏற்றி செல்கிறீர்களேயே என கதறி அழுதது அங்கிருந்த அனைவரையுமே கலங்க செய்தது.