The condition for the future husband of the movie Theeran is the heroine

தமிழில் தடையறத் தாக்க படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் மூலம் அறிமுகமானார் ரகுல் ப்ரித் சிங். அதன் பிறகு புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் கோலிவுட் இவரை கண்டு கொள்ளவில்லை.

இதையடுத்து தெலுங்கு சினிமா பக்கம் போன இவர் அங்கு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அதன்பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான 'ஸ்பைடர்' படத்தில் நடித்ததன் மூலம் பாராட்டை பெற்றார்.

இதையடுத்து தமிழில் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'தீரன் அதிகாரம் ஒன்று".இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது தமிழில் சூர்யா நடிக்கும் 36வது படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். 

இதையடுத்து கார்த்தியுடன் ரஜத் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். மேலும், ஹிந்தியில் அய்யாரி படத்தில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக அஜய் தேவ்கனுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். 

இந்நிலையில், ரகுல் பிரீத் சிங் தனது வருங்கால கணவர் பற்றி கூறியிருக்கிறார். அதாவது, மிகப்பெரிய மல்டி மில்லியனராக இருக்க வேண்டும், அயல்நாட்டுக்காரராக இருக்க வேண்டும் என்றெல்லாம் நான் ஆசைப்படவில்லை.

நல்ல மனிதராக இருக்க வேண்டும். நான் 5.9 அடி உயரம் இருக்கிறேன். அதனால் எனது வருங்கால கணவர், கண்டிப்பாக 6 அடி உயரம் இருக்க வேண்டும். இந்த மாதிரி ஆண் மகனைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். 
இவ்வாறு தெரிவித்துள்ளார்.