The commander picks up the Big boss Season 2 concert - Fans Request ...

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தளபதி விஜய் தொகுத்து வழங்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் முழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி 100 நாட்கள் நிறைவடைந்து, கிராண்ட் ஃபினாலே நடந்து வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன் வெற்றியாளர் ஆரவ் என நள்ளிரவு அறிவிக்கப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் அருமையாக தன் அரசியல் பேச்சோடு கலந்து வழங்கினார்.

இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வரவுள்ளதாக வெளிப்படையாக அறிவித்த்தால் அடுத்த சீசன் பிக்பாஸை தொகுத்து வழங்க வேறொருவரை ஏற்பாடு செய்யும் முனைப்பில் இருக்கிறது விஜய் டிவி.

இந்த நிலையில் தான், தளபதி விஜய்யின் பெயர் அடிபடுகிறது. ஆம், அடுத்த சீசனை தளபதி விஜய் தான் தொகுத்து வழங்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் ஒரே கூச்சல்.

விஜய் தற்போது நடிப்பில் பிஸியாக உள்ள நிலையில், பிக் பாஸை தொகுத்து வழங்குவாரா? ரசிகர்களின் வேண்டுகோளை விஜய் டிவி நிறைவேற்றுமா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.