The child who suffered torture by the shooting sport
டிசம்பர் 29, அதாவது வரும் வெள்ளிக் கிழமை அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘சங்கு சக்கரம்’ இந்தப் படத்தில் பேயாக நடித்துள்ள குழந்தை படக் குழுவினரால் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறி செல்வகுமார் என்பவர் காவல் துறை ஆணையரிடம் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

இந்தப் புகார் மனுவில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சமீபத்தில் நடந்த "சங்குசக்கரம்" திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு வீடியோவைப் பார்த்தேன். அதில் பேசிய, அப்படத்தில் நடித்த ஒரு குழந்தை நட்சத்திரம், தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், தனக்கு காண்டாக்ட் லென்ஸ் பொருத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அது மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பேசும்போது, அந்தப் பேயாக நடித்த குழந்தை நட்சத்திரத்தை கயிற்றில் கட்டித் தொங்க விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமும், படத்தின் இயக்குனரும் சொல்வதைப் பார்த்தால் அதில் நடித்துள்ள குழந்தைகள் கண்டிப்பாக துன்பப்பட்டு இருப்பார்கள் என்பது சந்தேகம் இல்லாமல் நிரூபணமாகிறது.

எனவே இந்தப் படத்தில் அப்படி குழந்தைகள் உண்மையில் துன்புறுத்தப் பட்டிருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு படத்தினை வெளியிடாமல் தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்
