The businessmans confession to the Amalapala bed
அமலா பால் பார்ட்டியில் கலந்து கொள்வதை உறுதி செய்யவே அங்கு சென்றேன் எனவும் மேனேஜர்தான் செட்டில் போய் பாருங்கள் என்று கூறினார் எனவும் தொழிலதிபர் அழகேசன் தெரிவித்துள்ளார்.
சிந்து சமவெளி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால்.

ஆனால் இவர் பிரபலமானது 'மைனா' திரைப்படம் தான். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானார்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் தலைவா படத்தில் ஹீரோயினாக கமிட் ஆனார். இதில் இயக்குநர் விஜய்க்கும் அமலாப்பாலுக்கு காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது.
ஆனால் இது நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. சில மாதங்களில் இருவரும் விவாகரத்து பெற்றனர். தற்போது பல படங்களில் அமலாப்பால் நடித்து வருகிறார். நடிப்பு வாய்ப்புக்காக கிளாமர் வேடங்கள் எடுப்பதும் உண்டு. இதன்மூலம் முன்னனி நடிகைகள் பட்டியலை தக்க வைத்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி 2' மற்றும் 'திருட்டு பயலே2' ஆகிய படங்கள் வெற்றி பெற்றது. மேலும் விரைவில் இவர் அரவிந்த் சாமியுடன் நடித்துள்ள 'பாஸ்கர் தி ராஸ்கல்' திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இன்று நடன பயிற்சிக்காக நடிகை அமலா பால் சென்ற போது, அவரை பின் தொடர்ந்து உள்ளே வந்த தொழிலதிபர் அழகேசன் என்பவர், நடன பயிற்சி பெருபவர் போல் மிகவும் சகஜமாக பேசி அமலா பாலிடம் பாலியல் தொந்தரவு செய்ய முற்பட்டதாக அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமலாபால், தொழிலதிபர் ஒருவர் என்னை பாலியல் தொழிலுக்கு அழைப்பது போன்று பேசினார் எனவும் செட்டில் இருப்பவர்கள் யாரோதான் அவரை என் ரூம்க்கு அனுப்பியுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும் தி. நகரில் உள்ள ஸ்ரீதர் மாஸ்டரின் ஸ்டுடியோவில் தான் இது நடந்தது எனவும் நான் தனியாக இருக்கும்போது பாலியல் ரீதியாக டிரேட் பண்ணுகிற மாதிரி பேசினார் எனவும் குறிப்பிட்டார்.

நான் அங்கு இருக்கும் நேரம் அவருக்கு தெரிந்துள்ளது எனவும் யாரோ ஒருவர் அவருக்கு என்னை பற்றிய தகவல்களை கொடுத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் போலீசார் விசாரணையில் மலேசியாவில் இருக்கும் தொழில் அதிபர் ஒருவர் அமலா பாலுக்கு பார்ட்டி கொடுக்கிறார். அந்த பார்ட்டிக்கு வர அமலா பால் சம்மதித்துள்ளார் என்று என் நண்பர் பாஸ்கர் என்னிடம் தெரிவித்தார் என அழகேசன் தெரிவித்தார்.

அமலா பால் பார்ட்டியில் கலந்து கொள்வதை உறுதி செய்யவே அங்கு சென்றேன் எனவும் மேனேஜர்தான் செட்டில் போய் பாருங்கள் என்று கூறினார் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கு அமலாப்பாலின் மேனேஜர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
