* விஜய்யோடு தெறி, மெர்சல் மற்றும் பிகில் என ஹாட்ரிக் அடித்திருக்கும் அட்லீ, அடுத்ததாக பாலிவுட் பாதுஷா வான ஷாரூக்கானை இந்தியில் இயக்குகிறார்! என்று தகவல் கசிந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ‘நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்க நான் ரெடி. நிச்சயமாக முடியும். அந்த மொழி பற்றிய எனது புரிதல் நன்றாகவே இருக்கும். 
அஜித் என் நண்பன், விஜய் ஒரு அற்புதம்.’ என்று தடாலடி அட்ராசிட்டியாய் பேசியுள்ளார் ஷாரூக். 

* துவகத்தில் செம்ம காதல் படங்களையும், அதன் பின் காமெடி படங்களையுமாக இயக்கிக் கொண்டிருந்த இயக்குநர் எழில், ‘ஆயிரம் ஜென்மங்கள்’ எனும் பெயரில் ஒரு பேய்ப்படத்தை இயக்கி வருகிறார். இதன் நாயகன் ஜி.வி.பிரகாஷ். இதில் ஜி.வி.பி.க்கு மூன்று நாயகிகள். 

* கடந்த சில வருடங்களாக பிரபுதேவாக்கு எந்த தமிழ்ப்படமும் ஓடவேயில்லை. செம்ம அடி. தேவி பார்ட் 1 மட்டுமே ஓரளவு கைகொடுத்திருந்தது. இந்த நிலையில், சல்மானை வைத்து தபாங் 3 படத்தை இயக்கி வரும் பிரபுதேவா, தமிழில் ‘ஊமைவிழிகள்’ என்ற தமிழ்ப்படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். 

* கோமாளி படம் ஜெயம்ரவிக்கு ஓரளவு கெத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் அந்தப் படத்தில் தன் உடன் நடித்ததன் மூலம் செம்ம ஃப்ரெண்டாகிப் போன யோகிபாபுவை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கும் முடிவிலிருக்கிறார் ஜெயம் ரவி. விரைவில் துவங்கலாமாம் படப்பிடிப்பு. 

* கமல்ஹாசன் அண்ட் பெரிய டீமை வைத்து இந்தியன் 2 படத்தை தாறுமாறான வேகத்தில் செதுக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். இந்தியன் முதல் பாகத்தை விட இந்தப் படத்தில் ஆக்ஷன் போர்ஷன் எல்லாம் தாறுமாறு பறத்தலாக இருக்க வேண்டுமென்பது இருவரின் எண்ணமும். இதனால் கமல் ஏகத்துக்கும் மெனெக்கெட்டுக் கொண்டிருக்கிறாராம். 

*தர்பார் படத்தில் தன் போர்ஷன்கள் எடுத்து முடிக்கப்பட்ட பிறகு, ஒரு சின்ன இடைவெளியில் கேரளாவில் சில நாட்கள் தங்கியிருந்து தன்னை இளமையாக்கும் சிகிச்சை மற்றும் பயிற்சிகளை செய்திருக்கிறார் நயன் தாரா. தன் உடலை விட முகம் அதிக முதிர்ச்சியாக இருப்பதாக அவருக்கு ஃபீலிங்காம்.