நடிகர் தனுஷ் நடிப்பில், கடைசியாக பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படம் 'பட்டாஸ்'. அடிமுறை என்கிற பழங்கால கலையை இந்த தலைமுறைக்கு நினைவு படுத்தும் விதமாக இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த படம் சூப்பர் ஹிட்டாக அமையாவிட்டாலும், சுமாரான வெற்றி பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து, தனுஷ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால், திரைப்படம் வெளியிடமுடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சூப்பர் தகவலை வெளியிட்டுள்ளார்.  இதில் நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜூலை 28 ஆம் தேதி, ‘ஜகமே தந்திரம்’ படத்தின் முதல் சிங்கிள் ‘ரக்கிட ரக்கிட ரக்கிட’ என்கிற பாடல் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த செய்தியால் தனுஷ் ரசிகர்கள் செம்ம ஹாப்பி...
 
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை, பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி முதல் முறையாக துனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

முக்கிய கதாப்பாத்திரத்தில், சஞ்சனா நடராஜன்,  ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகி உள்ளது. இந்த படத்தை Y NOT STUDIO  பிரமாண்டமாக தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.