"நன்றி நண்பரே".. அலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன தளபதி விஜய் - ட்வீட் போட்டு Thanks சொன்ன அன்புமணி!
முன்னாள் மக்களவை உறுப்பினராகவும், இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் தான் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள். இன்று தனது 55வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிவரும் அன்புமணி அவாக்ரள் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவர் ராமதாஸ் அவர்களின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே.
பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்து வரும் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு திரைத் துறையை சார்ந்த பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தனக்கு தொலைபேசி மூலம் அழைத்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய நடிகர் தளபதி விஜய் அவர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் நன்றிகளை தெரிவித்துள்ளார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
இது குறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில் எனது பிறந்த நாளை ஒட்டி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த நண்பர் நடிகர் விஜய் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பார்த்தசாரதி கோவிலில் சத்தமில்லாமல் 12000 பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
அதேபோல பிரபல இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் அவர்கள் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், "பாமக தலைவர், மருத்துவர், ஐயா அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சமூகநீதி காக்கவும், பாட்டாளி சொந்தங்களின் நல்வாழ்வுக்கான தங்களது பெரும் பணிகள் யாவும் சிறக்கட்டும்" என்று வாழ்த்தி உள்ளார்.
இதற்கு நன்றி கூறும் விதமாக தனக்கு வாழ்த்து கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ். அதேபோல பிரபல திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டிருந்த வாழ்த்து பதிவிற்கும் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் அன்புமணி அவர்கள்.
மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாக அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு சமூக வலைதள பக்கங்கள் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
கல்லூரி மாணவர்கள் மோதலால் போர்க்களமான ரயில் நிலையம்; அச்சத்தில் ஓடி ஒளிந்த பயணிகள்