வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் ஆளாக வந்து நிதி கொடுத்து உதவிய விக்ரம்! எவ்வளவு தெரியுமா?
கேரள மக்கள், மீண்டும் இயற்கையின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்டு போராடி வரும் நிலையில்... நடிகர் விக்ரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதல் ஆளாக வந்து நிதியுதவி அளித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாகவே பருவ மழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், போன்ற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில், ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் இதுவரை 200க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தும், மக்கள் பலர் புதை மண்ணுக்குள் சிக்கியும் உள்ளனர். இவர்களை காப்பாற்ற, கடந்த இரண்டு நாட்களாக தூக்கம் இன்றி இரவு பகல் பாராமல் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமான படையினர், ராணுவவீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராடி வருகிறார்கள்.
விக்ரமுடன் மோத பயந்து பின் வாங்கினாரா பிரஷாந்த்? 'அந்தகன்' பட ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்!
மேலும் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கேரள முதல்வர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு மக்களின் நிலைமை குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தளபதி விஜய், கமலஹாசன், ஜிவி பிரகாஷ், போன்ற பல பிரபலங்கள் கேரள மக்களின் நிலையை கண்டு வேதனையடைவதாக சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தனர்.
இதுவரை வெளியாகியுள்ள தகவலின் படி, புதை மண்ணில் சிக்கி 197 பேர் காயமடைந்துள்ளதாகவும், 150 பேர் மரணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விக்ரம் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதத்தில், ரூ. 20 லட்சம் தன்னுடைய சொந்த வைப்பு நிதியில் இருந்து கேரள முதல்வரின் மீட்பு பணிக்கு வழங்கியுள்ளார். இந்த தகவலை அவருடைய மேலாளர் யுவராஜ் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.