- Home
- Gallery
- விக்ரமுடன் மோத பயந்து பின் வாங்கினாரா பிரஷாந்த்? 'அந்தகன்' பட ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்!
விக்ரமுடன் மோத பயந்து பின் வாங்கினாரா பிரஷாந்த்? 'அந்தகன்' பட ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்!
நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியாக உள்ள 'அந்தகன்' படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

90களில் விஜய், அஜித்தை விட முன்னணி இடத்தில் இருந்தவர் நடிகர் பிரசாந்த். குறுகிய காலத்தில் யாராலும் எட்ட முடியாத உயரத்தை அடைந்த பிரசாந்தின் வளர்ச்சிக்கு, முக்கிய காரணம் இவரின் தந்தை தியாகராஜன் தான். பிரஷாந்த் 'பொன்னர் சங்கர்' படத்தில் நடிப்பதற்காக ஐந்து வருட காலம் மற்ற எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்ததும், இவருடைய குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையும் தான் நடிகர் பிரசாந்த் திரையுலகில் இருந்து காணாமல் போக காரணமாக அமைந்தது.
எப்படியும் விட்ட இடத்தை பிடித்து விடலாம் என பிரசாந்த் நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நிலைக்கு ஆளானார்.
இதை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யுடன் 'கோட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரசாந்த், அந்தகன் படத்திலும் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான 'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ள 'அந்தகன்' படத்தில் நடிகர் பிரசாந்த் கண் தெரியாதவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தியாகராஜன் இயக்கி - தயாரித்துள்ளார்.
Andhagan
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில், சிம்ரன், பிரியா ஆனந்த், யோகி பாபு, ஊர்வசி, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து கடந்த வாரம் வெளியான 'அந்தகன் அந்தம்' பாடலை தளபதி விஜய் வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களையும் பட குழுவுக்கு தெரிவித்தார்.
மேலும் இப்படம், ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்த நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி விக்ரமின் தங்கலான், அருள்நிதி நடித்துள்ள டிமான்டி காலனி, கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா போன்ற படங்கள் வெளியாவதால், பிரசாந்த் நடித்துள்ள 'அந்தகன்' படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.