நகைச்சுவை

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சிசிவா நடிப்பில் 2010 ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தமிழ் படம்.இப்படத்தில் இதுவரை வந்த தமிழ் படங்களில் நமக்கு பிடித்த, மிகவும் ஃபேமஸ் ஆன ஒரு சில விஷயங்களை கண்ட மேனிக்கு கலாய்த்து இருப்பார்கள். இப்படம் மிகவும் வித்தியாசமாகவும் நகைச்சுவையாகவும் இருந்ததால் வரவேற்பை பெற்றது.

இரண்டு ஹீரோயின்கள்


இந்நிலையில் இந்த படத்தின் தொடர்ச்சியாக இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்ட இயக்குனர் சி.எஸ்.அமுதன் வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இதிலும் மிர்ச்சி சிவாவே கதாநாயகனாக நடிக்க முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன்  ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

மலேசியா

மேலும் சதீஷ், சந்தான பாரதி, மனோ பாலா, ஆர். சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் இப்படத்தை தயாரிக்கிறார்.இந்நிலையில் இப்படத்தின் சில காட்சிகளை படமாக்குவதற்காக மலேசியா விரைந்துள்ளனர் படக்குழுவினர்.