thamilar munnetra padai against bigboss 2

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது

இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி வரும் 17 ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என தமிழர்முன்னேற்றப்படை கோரிக்கை விடுத்துள்ளது..

அதில்,

"நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழர்களின் உயர் கலாச்சாரத்தை கெடுத்து பண்பாடு,மற்றும் குடும்ப வாழ்வியலை குட்டிச்சுவராக்கி தமிழர்களின் உயர் தனிமனித ஒழுக்கத்தை நாசமாக்கும் நிகழ்ச்சியாகும்

இது அயல் நாட்டின் சீரழிந்த கலாச்சாரத்தை எங்கள் தமிழினத்திற்குள் புகுத்தும் முயற்ச்சி.

இது குடும்ப பெண்களுக்கு எதிரான நிகழ்ச்சி, இளம் பெண்கள் இளம் ஆண்கள் இடையே பாலியல் வன்புணர்ச்சி குற்றங்களை தூண்டும் நிகழ்ச்சி எனவே வரும் ஜுன் 17ம் தேதி வெளியாகும் BIG BOOS -2 (பிக் பாஸ்) நிகழ்ச்சியை தடைச்செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழர்முன்னேற்றப்படை கோரிக்கை விடுக்கிறது.

வரும் 13:6:2018, புதன்கிழமை அன்று காலை 11:00 மணிக்கு உள்துறை செயலாளர், தமிழ்நாடு அரசு அவர்களிடம் தமிழர்முன்னேற்றப்படை சார்பாக கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம்". இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.