நடிகர் கார்த்தி முதல் முறையாக தன்னுடைய அண்ணி, ஜோதிகாவுக்கு தம்பியாக நடித்துள்ள திரைப்படம் ’தம்பி’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது லுக் மற்றும் திரைப்படம் ரிலீஸ் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இந்த போஸ்டரின் ஜோதிகா, கார்த்தி, சத்யராஜ், ஆகிய மூவரின் முகங்களும் பாதி பாதியாக இடம்பெற்றுள்ளது. மேலும் டிசம்பர் மாதம் 'தம்பி' திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்படம் கிருஸ்துமஸ் விருந்தாக வெளியாக வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது.
மலையாளத்தில் பல வெற்றி படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.