ஒவ்வொரு வாரமும் நான்கு படங்களுக்கு மிகாமல் திரைக்கு வருகிறது. பெரிய படங்களின் வருகையால் சிறிய படங்கள் கண்டு கொள்ளப்படாமல் போகிறது. அதே நேரத்தில், ஒரே வாரத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் யாருடைய படம் அதிக வசூல் செய்தது என்பதை தெரிந்து கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுவர்.

அந்த வகையில், 'நம்ப வீட்டு பிள்ளை' படத்தின் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயன் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடித்த, 'ஹீரோ' திரைப்படமும், நடிகர் கார்த்தி 'கைதி' படத்தின் வெற்றி பின், பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தன்னுடைய அண்ணி ஜோதிகாவுடன் முதல் முறையாக இணைந்து நடித்த தம்பி திரைப்படமும் வெளியானது.

இந்த இரண்டு படங்களுக்குமே தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வந்த நிலையில், தற்போது இவ்விரு படங்களின் மூன்று நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், இதுவரை தம்பி திரைப்படம் 5 . 40 கோடியும், சிவகார்த்திகேயனின் ஹீரோ 10 . 30 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 'தம்பி' திரைப்படம் ஹீரோ படத்தை விட குறைவான வசூல் செய்திருந்தாலும், மக்களிடம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.