அறிமுக இயக்குனர் ரோஹின் வெங்கடேஷ் இயக்கத்தில், தமன்னா 'தேவி 2 ' படத்தை தொடர்ந்து நடித்து வரும் திகில் திரைப்படம் பெட்ரோமாக்ஸ்.  இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில மாதங்களுக்கு முன்பே முடிக்கப்பட்டு,  போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வந்தனர்.

இந்நிலையில், அனைத்து பணிகளும் முடிவடைந்ததை தொடர்ந்து இப்படம், சென்சார் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் யூ/ஏ சர்டிபிகேட் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தின்... ரிலீஸ் தேதியை விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். அதன் படி இப்படம், அக்டோபர் மாதம் 11ம் தேதி வெளியாக உள்ளது என படக்குழுவினர் தற்போது தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தை, இப்படத்தை ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. யோகிபாபு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு,  ஜிப்ரான் இசையமைத்துள்ளார். டானி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோ ஜான்பால் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.