சினிமாவில் முன்னனி நடிகைகள் காதல் கிசுகிசுவில் சிக்கிவருவது சகஜம்தான், குறிப்பாக பிரபல நடிகைகள் யாரை காதலிக்கிறார்கள் என தெரிந்து கொள்வதில் பலரும் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை தமன்னா பாகிஸ்தான் கிரிக்கெர் வீரர் அப்துல் ரசாக்குடன் காதலில் இருப்பதாக பாலிவுட் மீடியாக்கள் ஒரு செய்தியை பரப்பி வருகின்றது.
ஒரு கடைத்திறப்பு விழாவில் இருவரும் சந்தித்தார்கள், அப்போது எடுக்க பட்ட அந்த புகைப்படத்தை வெளியிட்டு இந்த செய்தியை பாலிவுட் மீடியாக்கள் வெளியிட்டு வைரலாக்கி வருகிறது.
ஆனால், இந்த புகைப்படம் 3 வருடத்திற்கு முன் வந்தது என்றும் இப்போது ஏன் இப்படி செய்கிறார்கள் என இந்த தகவல் தெரிந்த பலரும் தங்களுடைய கருத்தை கூறி வருகின்றனர்.

