Asianet News Tamil

அம்மாடியோவ் இவ்வளவு கோடியா?.... தலைசுற்ற வைக்கும் “தலைவி” ஓடிடி விற்பனை...!

இதை எல்லாம் கருத்தில் கொண்டு “தலைவி” படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும், அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Thalavi Will Directly Release on OTT? Sold To Netflix and Amazon For Rs.55 Crores
Author
Chennai, First Published Jun 5, 2020, 12:45 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையாக கொண்டு  “தலைவி”  என்ற படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் எடுத்து வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் திரையுலகின் டாப் ஹீரோயினான கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமியும், அவரது மனைவி ஜானகியாக  மதுபாலாவும் நடிக்கின்றனர். கருணாநிதியாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட “தலைவி” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. இதையடுத்து தவறுகளை சரி செய்ய படக்குழுவினர் களம் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனிடையே எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு அரவிந்த் சாமியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதைப் பார்த்த ரசிகர்கள் அரவிந்த் சாமி, அப்படியே எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக புகழ்ந்து தள்ளினர். 

இதையும் படிங்க: அஜித்தை விட நயன்தாரா ஸ்டார் வேல்யூ வேற லெவல்...லேடி சூப்பர் ஸ்டாரை ‘தல’ மேல் வைத்து கொண்டாடும் பிரபல நடிகர்!

இதனால் உற்சாகமடைந்த படக்குழு கங்கனாவின் செகண்ட் லுக் போஸ்டரை, ஜெயலலிதாவின் பிறந்த நாளின் போது வெளியிட்டது. கட்சி பார்டர் போட்ட சேலையில் அச்சு அசலாக ஜெயலலிதா போலவே இருந்த கங்கனாவின் தோற்றம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதையடுத்து படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் பன்மடங்கு உயர்ந்தது. 

இதையும் படிங்க:  கொழு, கொழுன்னு இருந்த குஷ்புவா இது?... ஓவர் ஸ்லிம் லுக்கில் மார்டன் உடையில் மனதை மயக்கும் கிளிக்ஸ்...!

இந்நிலையில் இந்த படம் ஆன்லைன் தளத்தில் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் இந்தி மற்றும் தமிழ் உரிமை ஓடிடி தளங்களான நெட் பிளிக்ஸ் மற்றும் அமேசானுக்கு 55 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக கங்கனா ரனாவத்தே பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த படம் முதலில் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்யப்படும் என்று திட்டவட்டமாக கூறினார்.

இதையும் படிங்க:  டீப் நெக் ஓபன்... டாப் ஆங்கிளில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... எல்லை மீறும் சாக்‌ஷி...!

ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் தியேட்டர்களை திறக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதை கணிக்க முடியவில்லை. இதற்கு முன்னதாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட ஜோதிகாவின் “பொன்மகள் வந்தாள்” திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு “தலைவி” படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும், அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Follow Us:
Download App:
  • android
  • ios