இந்தியாவில் சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர். அப்போது எப்படி சினிமாவில் பிசியாக இருந்தாரோ அதே போல் தான் இப்போதும், சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகலா வள்ளியாக சுற்றிச் சுழல்கிறார்.

 

இதையும் படிங்க: அஜித்தை விட நயன்தாரா ஸ்டார் வேல்யூ வேற லெவல்...லேடி சூப்பர் ஸ்டாரை ‘தல’ மேல் வைத்து கொண்டாடும் பிரபல நடிகர்!

பருவ வயதான 2 மகள்களின் தாய், அன்பான கணவர் என ஹாப்பியாக போய்கொண்டிருக்கிறது குஷ்புவின் வாழ்க்கை. தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்துள்ள குஷ்பு அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: “போன மாச கரண்ட் பில்லை கட்டிட்டு பேசுப்பா”...நடிகர் பிரசன்னாவிற்கு மின்வாரியம் கண்டனம்...!


தற்போது ஊரடங்கு நேரத்தில் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் குஷ்பு, தனது பழைய நினைவுகளை தூசு தட்டி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். ஏற்கனவே மகள்களின் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கிய குஷ்பு, தானும் பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். அதன் விளைவு, சும்மா கொழு, கொழுன்னு நச்சுன்னு இருந்த குஷ்பு தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கில் மனதை கொள்ளையடிக்கிறார். 

இதையும் படிங்க: நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம்... நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல்... குஷியில் ரசிகர்கள்...!

தற்போது குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. காரணம் கொழு, கொழு உடல் எடையை குறைந்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார் குஷ்பு. அதுமட்டுமல்ல தற்போது இருக்கும் இளம் ஹீரோயின்களுக்கே சவால் விடும் விதமாக மார்டன் உடையில் குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது. அதை நீங்களே பாருங்க...