பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக, மார்ச் 8-ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த நாளில் பிரபல பகிர்ந்துள்ள வாழ்த்துக்கள் பற்றி பார்க்கலாம். 

ஒவ்வொரு ஆண்டும், பெண்களை சிறப்பிக்கும் விதமாக மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடபடுகிறது. அந்த வகையில் இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்திற்கு பல பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளனர். 

தளபதி விஜய்:

அந்த வகையில் தளபதி விஜய் இன்று காலை வீடியோ வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த விடியோவில், "உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான தளபதி விஜய் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது,"எல்லோருக்கும் வணக்கம், இன்று மகளிர் தினம். தமிழ்நாடு முழுவதும் உள்ள என்னுடைய அம்மா, அக்கா, தங்கச்சி, தோழி, ஆகிய உங்கள் அத்தனை பேருக்கும் இந்த தினத்தில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துக்கள்.

சந்தோஷம் தானே? "பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும். எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாத போது இன் செக்யூரிட்டியாக இருக்கும்போது, எந்த ஒரு சந்தோஷமும் இருக்காது தானே? அப்படினு நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. என்ன செய்ய நீங்க - நான் எல்லாரும் சேர்ந்து தான் இந்த திமுகவின் அரசை தேர்வு செய்தோம். ஆனால் அவங்க இப்படி நம்மள ஏமாற்றுவாங்கன்னு இப்போதான் தெரிகிறது. எல்லாமே இங்கு மாறக் கூடியது தானே? மாற்றத்திற்கு உரியது தானே? கவலைப்படாதீங்க 2026ல நீங்க எல்லாரும் சேர்ந்து... இல்ல நாம எல்லாரும் சேர்ந்து, மகளீருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவங்கள மாத்துவோம். அதுக்கு மகளிர் தினமான இன்று, எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம். எல்லா சூழ்நிலையிலும் உங்களுடைய ஒரு மகனா, அண்ணனா, தோழனா, நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என கூறியுள்ளார்.

நடிகர் விஷால்:

நடிகர் விஷால், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், அம்மாவாக, அக்காவாக, தங்கையாக, மகளாக வாழும் அனைத்து உறவுகளுக்கும் புரட்சி தளபதி "விஷால்" மக்கள் நல இயக்கம் சார்பாக இனிய உலக மகளிர்தினம் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

வைரமுத்து:

கவிஞர் வைரமுத்து, தன்னுடைய மகளிர் தின வாழ்க்கை வழக்கம் போல் கவிதையோடு கூறியுள்ளார்.

உலகத் தாயினத்துக்கு
மகளிர்தின வாழ்த்துக்கள்

மண்ணில் பாதி மகளிர்;
மக்களில் பாதி மகளிர்

சமூகம் இயங்குவது
பெண்களால்

பெண்களை மையப்படுத்தாத 
குடும்பம் நிறுவனம் அரசியல்
கலை இலக்கியம் எதுவும்
அதன் லட்சியத்தை
அடைவதில்லை

ஆண் ஒரு சிறகு
பெண் ஒரு சிறகு
சமூகப் பறவை
இரண்டு சிறகுகளால்
பறந்தால்தான்
இரைதேட முடியும்

சமையல் அறையிலிருந்து
பெண்ணுக்குக் கிட்டும்
விடுதலையைத் தான்
பூரண விடுதலையென்று
போற்றுவேன்

மகளிரின் பெருமையறிந்து
மதிப்போடு வாழ்த்துகிறேன்

வாழ்க பெண்ணினம்!

என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பல பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.