லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதிலும் இதில் விஜய்க்கு வில்லனாக நடிப்பது நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அப்படியென்றால் சொல்ல வேண்டுமா? என எதிர்பார்ப்பு ஏகப்பட்ட அளவிற்கு எகிறியுள்ளது. லாக்டவுன் முடிந்ததும் மறுகணமே விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. 

“பாக்ஸ் ஆபிஸ் கிங்” மட்டுமல்ல “சோசியல் மீடியாவுக்கும் கிங்” என்பதையும் அவ்வப்போது விஜய் நிரூபித்து வருகிறார். விஜய் படம் பற்றி எந்த ஒரு சின்ன தகவல் கசிந்தாலும் அதற்கென தனி ஹேஷ்டேக்கை கிரியேட் செய்து தளபதி ரசிகர்கள் ட்விட்டரை தாறுமாறாக தெறிக்க வைத்துவிடுகின்றனர். 

தமிழ்நாட்டில் குழந்தை முதல் பெரியவர்கள் வரை விஜய் ரசிகர்கள் இல்லாத வீடே கிடையாது. அப்படி ரசிகர்கள் பட்டாளத்தை ஏராளமாக குவித்து வைத்திருக்கிறார். அதற்கு சிறந்த உதாரணம் மாஸ்டர் பட ஷூட்டிங்கின் போது ரசிகர்களுடன் தளபதி எடுத்துக்கொண்ட மெகா செல்ஃபி. அப்படிப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் எது செஞ்சாலும் அது சும்மா தாறுமாறு வைரல் தானே. 

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் அன்சீன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் அந்த வீடியோ காவலன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது. ரசிகைகளுடன் சேர்ந்து ஜாலியாக நடனமாடும் விஜய்யின் வீடியோ இதோ...