கடந்த ஆண்டை போல், விஜய்யின் உத்தரவின் பேரில் மே 28-ஆம் தேதி பசி தினத்தை விஜய் ரசிகர்கள் மற்றும் கட்சினர் சிறப்பாக அனுசரித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
உலக பசி தினம் 2011-ஆம் ஆண்டில் இருந்து மே 28-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. பசியின் அழுத்தமான பிரச்சினையை பிரதிபலிக்கும் நோக்கத்திற்காகவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் உலகில் உள்ள ஒருவர் கூட பசியில் வாட கூடாது என்பதை கருத்தில் கொண்டு, பலர் தங்களால் முடிந்த வரை பிறருக்கு உணவு வழங்குகிறார்கள்.
தமிழகத்தில் இந்த தினம், மிகவும் பிரபலம் இல்லை என்றாலும், மெல்ல மெல்ல இந்த பசி தினம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்று தான் கூறவேண்டும். அதற்க்கு முக்கிய காரணம் தளபதி விஜய். கடந்த ஆண்டு, தமிழகத்தில் உள்ள அணைத்து சட்ட மன்ற தொகுதிகளிலும், ஒவ்வொரு ஏரியாக்களில் ரசிகர்கள் மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என கூறிய விஜய், இந்த முறையும் அதனை பின்பற்றியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு, தி ஹங்கர் ப்ராஜெக்ட் என்ற சர்வதேச அமைப்பு மூலம் உலக பசி தினம் அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீண்டகாலம் பசி பட்டினியோடு இருப்பதால் அவர்களுக்கு, கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் ஊட்டச்சத்து பிரச்சனைகள் வரும் இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் என்ற உண்மையை உணர்த்துவதே இந்த பசி தினம்.
இந்த நாளில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில், விஜயின் த.வெ.க சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ரசிகர்கள் குடிசை வாழ் மக்கள் பகுதிகளுக்கு வீடு தேடி சென்று உணவு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இது போன்ற செயல்கள் மூலம் தளபதி விஜய், அரசியல் களத்தில் குதிப்பதற்கு முன்பாகவே மக்கள் மனதை வென்று விட்டார் என்பதே பலரது கருத்தாக உள்ளது. இது மட்டும் இன்றி தமிழகத்தில் ஓவ்வொரு மாவட்டத்திலும் டாப் 3 இடங்களை கைப்பற்றிய மாணவ - மாணவிகளுக்கு தளபதி அடுத்த மதம் 15 -ஆம் தேதிக்கு முன்னரே, ஊக்கத்தொகை வழங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
