நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் வெளிநாட்டுக்கு கிளம்பி சென்றுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். மேலும் இதில் சினேகா, மைக் மோகன், பிரபுதேவா, லைலா, பிரசாந்த், அஜ்மல், நிதின் சத்யா, வைபவ், பிரேம்ஜி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கோட் படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி நடிகர் விஜய்யை இளமையாக காட்ட உள்ளனர். அதற்கான பணிகள் தற்போது வெளிநாட்டில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோட் படத்தின் ஷூட்டிங் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதையடுத்து சென்னை, ஐதராபாத், துருக்கி, தாய்லாந்து என பல்வேறு நாடுகளில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதையும் படியுங்கள்... Rashmika Networth : ஆடம்பர பங்களா.. சொகுசு கார்கள்.. ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

கடந்த மாதம் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கிரீன் பீல்டு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக கேரளா சென்றிருந்த நடிகர் விஜய்க்கு அங்குள்ள ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தினசரி படப்பிடிப்பு முடிந்ததும் தன்னை காண குவிந்திருந்த ரசிகர்களுடன் பேசி, செல்பி எடுத்து மகிழ்ந்தார் விஜய், இதுதவிர ஓட்டலிலும் நள்ளிரவு வரை தன்னை காண காத்திருந்த ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அவர்களின் அன்பால் நெகிழ்ந்துபோனார்.

இந்த நிலையில், கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக தற்போது துபாய் கிளம்பி சென்றுள்ளார் விஜய். இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த நடிகர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் துபாய் கிளம்பி சென்றார். விமான நிலையத்தில் தன்னை காண காத்திருந்த குட்டிக் குழந்தையை பார்த்ததும் கையசைத்து அக்குழந்தையுடன் விஜய் கொஞ்சி விளையாடிய வீடியோவும் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... Ramya Pandian : கடற்கரையில் கவர்ச்சி புயலாக மையம் கொண்ட இடுப்பழகி ரம்யா பாண்டியனின் கிக்கான கிளாமர் clicks இதோ