Leo Poster: வெறித்தனமான கோவத்தை வெளிப்படுத்தும் விஜய்..! 'லியோ' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது..!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தில் இருந்து, சற்று முன்னர் மூன்றாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
 

thalapathy vijay starring leo movie 4th poster released mma

தளபதி விஜய், இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'லியோ'. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரோடக்ஷம் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் 'லியோ'  திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அவ்வப்போது இப்படம் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

 அந்த வகையில் இதுவரை மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஆங்கிலத்தில் 

Keep Calm And Avoid The Battle

Keep Calm And Plot Your Escape

Keep Calm And Prepare For Battle

thalapathy vijay starring leo movie 4th poster released mma

செம்ம வைப்.. பார்ட்டி மோடில் அசோக் செல்வன் - கீர்த்தி! தில்லானா தில்லானா... பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வைரல்

என டேக் லைன் பயன்படுத்த பட்டிருந்தது. இவர் படம் மீதான எதிற்பரப்பையும் தூண்டியது. இதை தொடர்ந்து சற்று முன்னர், நான்காவது போஸ்டர் 'லியோ' படத்தில் இருந்து வெளியாகியுள்ளது. இதுவரை விஜயின் புகைப்படம் சிங்கிளாகவே இடம்பெற்றிருந்த நிலையில், இந்த போஸ்டரில் சஞ்சய் தத் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. விஜய் மிகவும் ஆக்ரோஷமாக சஞ்சய் தத் கழுத்தை பிடித்திருப்பது போல் இந்த போஸ்டர் உள்ள நிலையில், 'Keep Calm and Face the Devil ' என்கிற டேக் லைன் இதில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் சஞ்சய் தத் வெறித்தனமான வில்லனாக இப்படத்தில் நடிப்பது தெரிகிறது.

thalapathy vijay starring leo movie 4th poster released mma

மனசாட்சியே இல்லையா? விஜய் ஆண்டனி மகள் இறுதிச்சடங்கில் ஊடகங்கள் நடந்து கொண்ட விதம்! எகிறும் கண்டனங்கள்!

தளபதி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், பிரியா ஆனந்த், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், மிகப்பெரிய பெரும் பொருட்செலவில் செவன் ஸ்கிரீன் நிறுவனம் மூலம் லலித் இப்படத்தை தயாரித்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள புதிய போஸ்டர் இதோ...
 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios