லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் தயாரான “மாஸ்டர்” திரைப்படம் கடந்த 9ம் தேதி ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. உலகத்தையே உலுக்கி எடுக்கும் கொரோனா பிரச்சனை தற்போது இந்தியாவில் கோர தாண்டவம் ஆடிவருகிறது. அதனால் நேற்றுடன் முடியவிருந்த ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அவர்கள் மே 3ம் தேதி வரை நீட்டித்துள்ளார். ஊரடங்கு கால வழிகாட்டி நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 


இதையும் படிங்க: காதல் தோல்விகளுக்கு காரணம் இதுதான்... முதல் முறையாக மனம் திறந்த நயன்தாரா...!

அதில் அனைத்து தியேட்டர்களையும் மே 3ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால்  “மாஸ்டர் “ பட இன்னும் சில நாட்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.கொரோனா திரையுலகை எந்த அளவிற்கு ஆட்டி வைக்கிறதோ அதை விட அதிகமாகவே தளபதி விஜய்யை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. மாஸ்டர் பட ரிலீஸ் தள்ளிப்போனதை விட விஜய் வேறொரு மிகப்பெரிய வருந்தத்தில் இருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தோம் இல்லையா?.


அதாவது, விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் சினிமாத்துறை சார்ந்த படிப்பை படித்து வருகிறார். கொரோனா பிரச்சனை காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் விஜய் மகன் கனடாவிலேயே தங்க வேண்டிய சூழலால் ஏற்பட்டுள்ளது. அங்கு கொரோனாவின் தாக்கம் பெரிய அளவில் இல்லை என்றாலும், இப்படிப்பட்ட நெருக்கடி நிலையில் மகனை பிரிந்திருப்பதை நினைத்து தளபதி விஜய் மிகவும் சோகத்தில் ஆழ்த்திருக்கிறார் என்று நடிகர் சித்ரா லட்சுமண் அவரது யூ-டியூப் சேனல் மூலம் தெரிவித்தார். 


இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!

இந்நிலையில் வெளிநாட்டில் தங்கியிருக்கும் விஜய் மகன் சஞ்சய் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாகவும், நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய் மட்டுமல்ல அவரது ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.