கோலிவுட்டில் தற்போது பரபரப்பு கிளப்பி வரும் காதல் ஜோடி நயன்தாரா -  விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தின் மூலம் பற்றிய காதல் தீ இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுகிறார். அங்கு போய் இருவரும் ஜாலியாக ஊர் சுற்றுவது போதாது என்று, விதவிதமாய் போட்டோ எடுத்து... அதை இன்ஸ்டாவில் போட்டு முரட்டு சிங்கிள்ஸை வெறுப்பேற்றுகின்றனர். 

நயன் எங்கு போனாலும் விக்னேஷ் சிவனுடன் தான் செல்கிறார். பதிலுக்கு விக்கியும் நயனை அதிகாரம் செய்யாமல் தங்கமே, வைரமே என்று கொஞ்சுகிறார். சில மாதங்களுக்கு முன்பு மூக்குத்தி அம்மன் படப்பிற்காக சென்ற இடத்தில் கோவில், கோவிலாக சென்று இருவரும் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. நயனும் - விக்கியும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் பிரபல நடிகை... ஓவர் கிளாமர் போட்டோஸை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

எப்ப தான் இந்த காதல் ஜோடி கல்யாணம் செய்து கொள்ளும் என்று ஒட்டுமொத்த திரையுலகம் மட்டுமல்ல ரசிகர்கள் பட்டாளமும் ஆவலுடன் காத்திருக்கிறது. நயனின் க்யூட் போட்டோஸை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஆயிரக்கணக்கில் லைக்குகளையும் அள்ளிவிடுகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி நடிக்க காத்து வாங்குல இரண்டு காதல் படம் அறிவிப்போடு நிற்கிறது. 

இதையும் படிங்க: கொரோனா அச்சத்தால் பின்வாங்கிய சுகாதார பணியாளர்கள்... தில்லாக களத்தில் இறங்கி கிருமி நாசினி தெளித்த ரோஜா....!

ஊரடங்கால் நயன்தாரா, விக்கி பற்றி எந்த அப்டேட்டும் கிடைக்காததால் ரசிகர்கள் அவர்களது பழைய போட்டோஸை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். அப்படி நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவங்க மாமியாருடன் அதுதாங்க விக்னேஷ் சிவன் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.  மாமியார் பக்கத்தில் அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருக்கும் நயன்தாராவின் அந்த அடக்க ஒடுக்கமான போஸை நீங்களே பாருங்கள்....