கொரோனா அச்சத்தால் பின்வாங்கிய சுகாதார பணியாளர்கள்... தில்லாக களத்தில் இறங்கி கிருமி நாசினி தெளித்த ரோஜா....!
எம்.எல்.ஏ. என்ற முறையில் ரோஜா நினைத்திருந்தால் ஒரே ஒரு உத்தரவை போட்டு சுகாதார பணியாளர்களை வீடு, வீடாக போய் கிருமி நாசினி தெளிக்க வைத்திருக்க முடியும்.
சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த ரோஜா, அரசியலில் இறங்கி கலக்கிவருகிறார். கடந்த ஓராண்டாகவே நகரி எம்.எல்.ஏ.வான ரோஜா, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான உணவை 4 ரூபாய்க்கு கொடுத்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் பலரும் உணவின்றி கஷ்டப்படுவதை அறிந்த ரோஜா, அந்த உணவு கூடத்தை மேலும் விரிவாக்கி தினமும் 5 ஆயிரம் பேருக்கு கூடுதலாக உணவு கொடுத்து வருகிறார்.
கொரோனா நேரத்தில் ஆண் எம்.எல்.ஏ.க்களுக்கு சமமாக களத்தில் இறங்கி தூள்கிளப்புகிறார். ஆந்திர மாநிலம் நகரி தொகுதிக்குட்பட்ட வடமாலை பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அங்கிருந்த சுகாதார கொரோனா அச்சம் காரணமாக கிருமி நாசினி தெளிக்க தயங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: வெறியாட்டம் ஆடும் கொரோனா... மகனை நினைத்து பரிதவிக்கும் தளபதி விஜய்...!
இந்த தகவல் அந்த தொகுதி எம்.எல்.ஏ.வான ரோஜாவிற்கு கிடைத்துள்ளது. கொரோனா என்ற கொடிய அரக்கனிடம் இருந்து தனது தொகுதி மக்களின் உயிரை காக்க முடிவு செய்த ரோஜா, துணிச்சலாக தானே களத்தில் இறங்கினார். முகக்கவசம், பாதுகாப்பு உடை, கிளாவுஸ் ஆகியவற்றை அணிந்து கொண்டு ஊர் முழுவதும் வீடு, வீடாக சென்று கிருமிநாசினி தெளிக்க ஆரம்பித்தார். எம்.எல்.ஏ. ரோஜா கொடுத்த தையரித்தால் தெளிவு பெற்ற சுகாதார பணியாளர்களும் எவ்வித தயக்கமும் இன்றி கிருமி நாசினி தெளிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதையும் படிங்க: சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் பிரபல நடிகை... ஓவர் கிளாமர் போட்டோஸை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!
எம்.எல்.ஏ. என்ற முறையில் ரோஜா நினைத்திருந்தால் ஒரே ஒரு உத்தரவை போட்டு சுகாதார பணியாளர்களை வீடு, வீடாக போய் கிருமி நாசினி தெளிக்க வைத்திருக்க முடியும். ஆனால் அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாகவும், எனது தொகுதி மக்களின் உயிரை காப்பது எனது கடமை என களத்தில் இறங்கியும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். ரோஜாவின் இந்த துணிச்சலான செயலைக் கண்டு அந்த தொகுதி மக்கள் மனமார பாராட்டினர்.