கடந்த தீபாவளிக்கு முருகதாஸ் இயக்கத்தில், சன்பிக்சர்ஸ் மிக பிரமாண்டமாக தயாரித்த விஜயின் ‘சர்கார்’ பல சர்ச்சைகளை எதிர்கொண்டாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், படம் வெளியாவதற்கு முன்பாக டிஜிட்டல் உலகில் பல்வேறு சாதனைகளை செய்தது. அதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல்களும் உண்டு. தற்போது 2018 ஆம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், சர்கார் மூலம் விஜய் யாரும் அசைக்க முடியாத சாதனையோடு இந்த ஆண்டை நிறைவு செய்கிறார்.

ஆம், “ஒரு விரல் புரட்சி” பாடல் இணையத்தில் பெரும் புரட்சி செய்த நிலையில், தற்போது இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ, “Most anticipated video of the year” என்ற சிறப்பை பெற்றுள்ளதாக பாடல்களை வெளியிட்ட சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதேபோல, விஜய் ட்விட்டரில் 6-வது இடத்தை தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பிடித்துள்ளார். 7-வது இடத்தில் ஷாருக்கான், 8-வது இடத்தில் நடிகர் விஜய், 9-வது இடத்தில் மகேஷ் பாபு , 10-வது இடத்தில் சிவராஜ்சிங் சௌஹான் ஆகியோர் உள்ளனர்.

இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பலரும் இந்த ஆண்டில் பலமுறை ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். ஆனால் நடிகர் விஜய் இந்த ஆண்டில் 3 முறை மட்டுமே தனது ட்விட்டர் கணக்கில் ட்வீட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட தருணங்களில் சர்கார் படமும் இரண்டாவது இடத்தில் #MeToo இயக்கமும் இடம்பெற்றுள்ளது.