லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள “மாஸ்டர்” திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் மார்ச் மாதமே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படை எடுத்த, கொரோனா தொற்று காரணமாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் போனது. அதே நேரம், மாஸ்டர் படம் ரிலீசாகும் என காத்திருந்த ரசிகர்களின் கனவும் இன்னும் நிறைவேறாமல் உள்ளது.

 

இதையும் படிங்க: “இனி இப்படியே டிரஸ் போடு ராசாத்தி”... ‘குட்டி’ நயன் அனிகாவின் போட்டோஸைப் பார்த்து குதூகலமான ரசிகர்கள்...!

இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் தாறுமாறாக எகிறியுள்ளது. தீபாவளி ஸ்பெஷல் ட்ரீட்டாக  மாஸ்டர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ஜான் துரைராஜ் (ஜேடி) என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருப்பது உறுதியாகியனது. ஒரு மணி நேரத்திற்கு 1 மில்லியன் என்ற கணக்கில் டீசர் வெளியான 16 மணி நேரத்திலேயே 16 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். 

 

இதையும் படிங்க: இங்க நயன்தாரா... அங்க சமந்தா... டாப் லிஸ்டை பார்த்து வயிறெரியும் இளம் நடிகைகள்...!

சன் யூ-டியூப் சேனலில் ஒளிபரப்பப்பட்ட மாஸ்டர் டீசரை ஒரே நாளில் 20 மில்லியன் வியூஸ்களை கடந்து ஓட்டுமொத்த இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.  அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே அதிகம் லைக் செய்யப்பட்ட டீசர் என்பதற்காக #MasterMostLikedTeaser என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி தேசிய அளவில் ட்ரெண்ட் செய்தனர். இப்படி அடுத்தடுத்து சாதனை படைத்து வரும் மாஸ்டர் பட டீசரை இதுவரை 40 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். இதனை படக்குழுவினர் சோசியல் மீடியாவில் ஷேர் செய்ய விஜய் ரசிகர்கள் வேற லெவலுக்கு கொண்டாடி வருகின்றனர்.