​லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் முதன் முறையாக இணைந்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் கொரோனா பிரச்சனையால் பாதிக்கப்பட்டது.இடையில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக வதந்தி பரவியது. 

தற்போது அனைத்து விதமான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் தியேட்டரில் தான் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தரப்பு உறுதி அளித்துள்ளது. ஆனால் எந்த தேதியில் வெளியாகும் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகமல் இருந்தது. மேலும் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத்தை தவிர இந்தியிலும் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட உள்ளதால் அதற்கான பணிகள் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன. 

பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ள மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு முந்தைய தினமான ஜனவரி 13ம் தேதி வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. நேற்று முதல்வரை சந்தித்த நடிகர் விஜய்யும் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளதோடு, மாஸ்டர் ரிலீசுக்கு ஒத்துழைக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இதனிடையே நேற்று இன்று நண்பகல் சரியாக 12.30 மணிக்கு மாஸ்டர் ரிலீஸ் குறித்த தகவலை வெளியிடுவதாக தெரிவித்திருந்தது. அதன்படி அதாவது மாஸ்டர் படம் ஜனவரி 13ம் தேதி தான் வெளியாகிறது என்பதை புது போஸ்டருடன் தெரிவித்துள்ளனர். தெலுங்கு, இந்தி மொழிகளில் டப்பிங் பிரச்சனை இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அந்த மொழியிலும் ஜனவரி 13ம் தேதி தான் படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் தலைகால் புரியாத அளவிற்கு மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.