“கைதி” பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் “மாஸ்டர்” படத்தில் நடித்து முடித்துள்ளார். முதன் முறையாக விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளதால் இந்த படத்தை காண இருவரது ரசிகர்களும் மரண வெயிட்டிங்கில் உள்ளனர். ஏப்ரல் 9ம் தேதியே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய மாஸ்டர் திரைப்படம் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்து வருவதால் ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. 

இதையும் படிங்க: “நாயகி” சீரியல் நடிகை வித்யாவா இது?... குட்டை டவுசரில் கவர்ச்சி தூக்கலாக கொடுத்த ஹாட் போஸ்...!

தற்போது இந்தியாவில் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. ஒருவேலை மே 3ம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்டு, தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் படத்திற்கு முன்னதாக நிறைய படங்கள் வெயிட்டிங் லிஸ்டில் உள்ளன. அதுமட்டுமின்றி கொரோனா தொற்றால் தற்போது ஆன்லைன் மூலம் படம் பார்த்து பழகிவிட்ட மக்கள், தியேட்டருக்கு வருவதை எந்த அளவிற்கு விரும்புவார்கள் என்று தெரியவில்லை. இதை எல்லாம் கருத்தில் கொண்டே மீண்டும்“மாஸ்டர்” பட ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் படக்குழு தாமதம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் “மாஸ்டர்” படம் குறித்து சோசியல் மீடியாவில் கசிந்துள்ள சூப்பர் தகவல் ஒன்று தளபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது “மாஸ்டர்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஐநாக்ஸ் தியேட்டர் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 

இதையும் படிங்க: ‘ஓ போடு’ பாட்டுக்கு ஓவர் கிளாமர் டிரஸில் டிக்-டாக்... ஊரடங்கிலும் கிளுகிளுப்பை கூட்டும் கிரண்...!

கேரளாவில் விஜய்க்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அதேபோல் தான் தெலுங்கு மற்றும் இந்தியிலும், கர்நாடகாவில் நடந்த “மாஸ்டர்” பட ஷூட்டிங் போது தளபதி விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த வித்தியாசமான வரவேற்பை பார்த்து திரையுலகமே ஆச்சர்யப்பட்டது. இதையடுத்து ஒரே நேரத்தில் 5 மொழிகளில் “மாஸ்டர்” படத்தை இறக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பட வசூலை “பிகில்” படம் மூலமாக முறியடித்த விஜய், இந்த மாஸ்டர் பிளான் மூலம் என்ன சாதனைகளை எல்லாம் செய்யப்போறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.