சென்சாரில் இயங்கும் சானிடைசர்... கண்டுபிடித்தது யாரென தெரிந்தால் அசத்துபோவீர்கள்...!
விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளரும், நடிகருமான ரியோ ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சென்சாரில் இயங்கும் சானிட்டைசர் மிஷினின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து உலகம் முழுதும் பரவி அனைத்து நாடுகளையும் அச்சுறுத்திவரும் கொரோனா, இந்தியாவில் தற்போது கோரமுகத்தை காட்டிவருகிறது. மார்ச்-ஏப்ரலில் கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்த இத்தாலி, பிரிட்டன், ஃப்ரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தான் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
உலகளவில் இதுவரை ஒரு கோடியே 83 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 27 லட்சத்து 82 ஆயிரம் பேரும், அதற்கடுத்தபடியாக பிரேசிலில் 14 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை கடந்துவிட்டது. இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே, தினமும் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகிவருகிறது. அதனால், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை தாறுமாறாக எகிறுகிறது.
இதுவரை கொரோனா வைரஸில் இருந்து காக்க அதிகாரப்பூர்வமான தடுப்பு மருத்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அடிக்கடி கைகழுவுவதும், முகக்கவசம் அணிவதும் மட்டுமே சரியான தற்காப்பு தீர்வு என அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் விஜய் டிவியில் காமெடியனாக நுழைத்து தற்போது பா.பாண்டி, கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் கலக்கியுள்ளவர் நடிகர் தீனாவின் அற்புத கண்டுபிடிப்பு ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளரும், நடிகருமான ரியோ ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சென்சாரில் இயங்கும் சானிட்டைசர் மிஷினின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அத்துடன் இதை செய்த இன்ஜினியர் இவர் தான் என தீனா வேலை செய்து கொண்டிருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த சானிட்டைசர் மிஷினை வேண்டுமென்றால் தீனாவை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.