Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் மீண்டுமா.. லியோ படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. 1300 நடன கலைஞர்களுக்கு சம்பள பாக்கி? - என்ன பிரச்சனை?

இன்னும் சில நாட்களில் தளபதி விஜய் அவர்களின் லியோ திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் உள்ள, மீண்டும் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thalapathy vijay leo movie face new trouble 1300 dancers not received salary for naa ready thaan song ans
Author
First Published Oct 7, 2023, 5:10 PM IST

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தளபதி விஜய் அவர்கள் நடிக்கும்  திரைப்படம் தான் லியோ. நடிகை திரிஷா, நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலி கான் சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் இருந்து "நான் ரெடி தான்" பாடல் வெளியான நாள் முதல் ரசிகர்கள் இதை மிகப்பெரிய அளவில் கொண்டாடிவரும் அதே நேரம், பெரும் சர்ச்சைகளிலும் லியோ திரைப்படம் சிக்கி வருகின்றது. குறிப்பாக நான் ரெடி தான் பாடலில் வரும் வசனங்களுக்காக முதலில் பெரிய அளவில் சர்ச்சை கிளம்பியது. அதை தொடர்ந்து ட்ரைலரில் விஜய் பேசும் கெட்டவார்த்தையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

விடாமுயற்சியில் இருந்து விலகிய ஹீரோயின்... அஜித் படத்தில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்! இனி அவருக்கு பதில் இவராம்

இன்னும் இந்த பிரச்சனைகளே ஓயாத நிலையில், தற்போது லியோ படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்துள்ளது. அதாவது நான் ரெடி தான் பாடலில் நடனமாடிய சுமார் 1300 நடன கலைஞர்களுக்கு சுமார் 4 மாதங்களாகியும் இன்னும் பேசிய சம்பளம் வரவில்லை என்று சிலர் புகார் அளித்துள்ளனர். ஒரு நாளிற்கு 2500 ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை ஒரு தனியார் செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சம்பளம் குறித்து உரிய நபர்களிடம் கேட்டால், இன்று..நாளை என்று நாட்களை கத்திகொண்டே போவதாக அந்த நபர்கள் கூறியுள்ளனர். லியோ திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களாக இருக்கும் நிலையில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. அந்த நடன கலைஞர்களுடைய பிரச்சனை என்ன என்று தீர விசாரித்து, படக்குழு நல்ல பதிலை அவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர். 

அக்.18ல் வெளியாகிறது லியோ திரைப்படம்.. பிரீமியர் ஷோ அறிவிப்பு - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..

Follow Us:
Download App:
  • android
  • ios