அக்.18ல் வெளியாகிறது லியோ திரைப்படம்.. பிரீமியர் ஷோ அறிவிப்பு - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
vijay movie leo
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இப்படத்தில் த்ரிஷா , கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.
thalapathy vijay
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ள நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது லியோ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
leo
சன் டிவி யூடியூப் பக்கத்தில் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியானது. விஜய் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
Leo Movie
இந்த டிரைய்லரில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசுவது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும் உண்டாக்கி உள்ளது என்றே சொல்லலாம்.
Leo Release Date
இந்த நிலையில் விஜய்யின் லியோ திரைப்படம் வரும் 18-ம் தேதி பிரீமியர் ஷோவாக வெளியாகிறது. 1,000 திரையரங்குகளில் வரும் 18-ம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள் என வெளியாகும்.
Lokesh Kanagaraj
"லியோ" சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முன்தினமே பிரீமியர் ஷோவாக வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். இது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.