தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆன்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு” போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. அதன் மூலம் கமலுடன்  “விஸ்வரூபம்” படத்தின் முதலாவது மற்றும் 2ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தி நடித்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் உடன் ஆன்ட்ரியா நடித்த  வடசென்னை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 

இதையும் படிங்க: செல்ஃபி எடுக்க போன இளம் நடிகையிடம்... சிம்பான்ஸி குரங்கு பார்த்த வேலையை நீங்களே பாருங்க....!

இடையில் இசையமைப்பாளர் அனிருத் உடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே திருமணமான நடிகருடன் உறவில் இருந்ததாகவும், அதனால் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஆன்ட்ரியா பல மாதங்கள் சிகிச்சையில் இருந்ததாகவும் கூறப்பட்டது. அந்த சம்பவத்தால் மனம் உடைந்த ஆன்ட்ரியா சினிமாவில் நடிக்காமல் இருந்தார். 

இதையும் படிங்க: மீண்டும் வெளியானது ஆன்ட்ரியா லிப் லாக் காட்சி.... தீயாய் பரவும் வீடியோ...!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் ஆன்ட்ரியாவிற்கு  முக்கிய கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. கொரோனா பிரச்சனை மட்டும் இல்லை என்றால் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதியே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே மாஸ்டர் திரைப்படம் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: ஒட்டு துணி கூட இல்லாமல் உச்ச கட்ட ஆபாசம்... பலான காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாத சர்ச்சை இயக்குநரின் படம்...!

இந்நிலையில் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடந்த சுவாரஸ்யமான விஷயம் குறித்து ஆன்ட்ரியா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆன்ட்ரியாவிற்கு பிகில் படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடல் மிகவும் பிடிக்குமாம். அதை விஜய் தான் பாடினார் என்பதே தெரியாமல் அவரிடமே கூறியுள்ளார். இதை கேட்ட விஜய் ஏன்மா நீயெல்லாம் தமிழ்நாட்டுல தான் இருக்கியா? என்று மரண கலாய் கலாய்த்தாராம். ஷூட்டிங் ஸ்பார்ட்டில் பெரிதாக யாரிடமும் பேசாமல் இருந்த விஜய், தற்போது தான் சக நடிகர்களை கிண்டல் செய்யும் அளவிற்கு மாறியிருக்கார் என்பது குறிப்பிடத்தக்கது.