Jana Nayagan First Roar Video : தளபதி விஜய் இன்று தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியான Jana Nayagan First Roar வீடியோவானது 15 நிமிடங்களில் 1 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை படைத்துள்ளது.
ஜன நாயகன் விஜய்யின் கடைசி படம்
Jana Nayagan First Roar Video : தளபதி விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் என்று தளபதி விஜய் கூறிய நிலையில் அவரது கடைசி படமாக ஜன நாயகன் படம் உருவாகி வருகிறது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், வரலட்சுமி சரத்குமார், பாபா பாஸ்கர், கௌதம் மேனன், நரைன், பிரகாஷ் ராஜ் என்று ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
விஜய்யின் அரசியல் வருகை:
விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு வெளியாகும் 2ஆவது படம் ஜன நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கோட் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இப்போது ஜன நாயகன் படம் உருவாகி வருகிறது. படத்தின் டைட்டிலிலேயே விஜய்யின் அரசியல் எண்ட்ரியை இந்தப் படம் குறிக்கிறது. மேலும், மக்களுக்கான நாயகன் என்பதையும் இந்த டைட்டில் எடுத்துரைக்கிறது.
கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம்:
கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படும் இந்தப் படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை விஜய் தனக்கான அரசியல் மேடையாக பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி விஜய்யின் 51ஆவது பிறந்தநாள்:
இந்த நிலையில் தான் தளபதி விஜய் இன்று ஜூன் 22ஆம் தேதி தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் விதமாக ஜன நாயகன் படத்தின் முதல் ரோர் வீடியோ வெளியாகியுள்ளது. அதோடு முதல் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. ஜன நாயகன் போஸ்டரில் விஜய் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு கையில் வாள் உடன் கோபமாக இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.
என் நெஞ்சில் குடியிருக்கும்:
இதே போன்று வெளியிடப்பட்ட வீடியோவின் தொடக்கத்தில் என் நெஞ்சில் குடியிருக்கும் என்று விஜய் பேசும் டயலாக் உடன் தொடங்கி உண்மையான தலைவன் உருவாவது பதவிக்காக அல்ல, மக்களுக்காக என்று குறிப்பிடப்பட்டு விஜய் போலிஸ் கெட்டப்பில் எண்ட்ரி கொடுப்பது போன்று வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவில் கையில் வாள் வைத்துக் கொண்டு மீசையை தொடுவது போன்றும் காட்டப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Jana Nayagan First Roar
தளபதி விஜய்யின் பிறந்தநாளை Jana Nayagan First Roar உடன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தான இந்த Jana Nayagan First Roar வீடியோ வெளியான சற்று 15 நிமிடங்களில் 1 மில்லியனுக்கும் அதிகமாக ரியல் டைம் வியூஸ் கடந்து சாதனை படைத்துள்ளது என்று கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய்யை பற்றி கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் கூறியது:
கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில் விஜய் பற்றி கூறியிருப்பதாவது:
தளபதி விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் தி ஃபர்ஸ்ட் ரோர் டீசரானது ஜூன் 22 அன்று அதாவது 51ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதுவரையில் 68 படங்களில் நடித்து விஜய்யின் 30 வருட சினிமா வாழ்க்கையிலிருந்து ஃபோர்ப்ஸ் 2024 அறிக்கையின் படி விஜய்யின் நிகர சொத்து மதிப்பு 50 மில்லியன் டாலர் ஆகும். சினிமாவை விட்டு விட்டு அவர் அரசியலுக்கு வந்தது எம்ஜி ராமசந்திரன் போன்ற நடிகர்கள் அரசியல் தலைவர்களாக மாறிய தமிழக தலைவர்களின் வருகையால் ஈர்க்கப்பட்ட ஒரு சிறந்த நகர்வை எடுத்துக் காட்டுகிறது.
விஜய் சிம்மாசனத்தில் வாளை ஏந்தியிருப்பது போன்ற டீசரின் காட்சிகள் விஜய்யின் அரசியல் பயணத்தை குறிப்பதாக தெரிகிறது. மேலும் இது மெர்சல் 2017 மற்றும் லியோ 2023 போன்ற பிளாக்பஸ்டர் படங்களை அடிப்படையாக வைத்து போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அரசியல் உள்நோக்கங்களுடன் ஆக்ஷனைக் கலக்கும் ஒரு கதையைக் குறிக்கிறது. இது சிறந்த பொழுதுபோக்கு படம் என்பதையும் தாண்டி கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை இந்தப் படம் அடிக்கோடிட்டு காட்டுவதாக அமைகிறது.
