தல அஜித்திற்கு ஜோடியாக “அமராவதி” படத்தில் நடித்த தன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் சங்கவி. அறிமுகம் என்னவோ அஜித்துடன் தான் என்றாலும், தளபதி விஜய்யுடன் “கோயமுத்தூர் மாப்பிள்ளை”, “ரசிகன்”, “விஷ்ணு”, “நிலாவே வா” என அடுத்தடுத்த படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். விஜய் - சிம்ரன் காம்பினேஷனுக்கு முன்பே விஜய் - சங்கவி காம்பினேஷன் ரசிகர்கள் மனதில் முக்கிய இடம் பிடித்தது. 

இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியாக பாடகி சைந்தவி... முதன் முறையாக வெளியான க்யூட் போட்டோஸ்...!

90’ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகியாக வலம் வந்த சங்கவி, ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய் காந்த். சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி ஐ.டி. துறையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அதன் பின்னர் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த சங்கவி, 2019ம் ஆண்டு சமுத்திரகனிக்கு ஜோடியாக “கொளஞ்சி” என்ற படத்தில் நடித்தார். அதில் அவரது கேரக்டர் நல்ல வரவேற்பு பெற்றது. 

இதையும் படிங்க:  மீரா மிதுன், யாஷிகாவையே பின்னுக்குத் தள்ளிய இலங்கை அழகி... முன்னழகை காட்டி மிரளவைக்கும் ஹாட் செல்ஃபி...!

தற்போது பெங்களூருவில் கணவருடன் வசித்து வந்த சங்கவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தன்னுடன் நடித்த சக நடிகைகள் பலரும் திருமணம் செய்து குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். ஆனால் தனது 39வது வயதில் திருமணம் செய்து கொண்ட சங்கவி, 42 வயதில் தாயாகியுள்ளார். முதன் முறையாக தனது செல்ல மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சங்கவி, என்னுடைய குட்டி தேவதை என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: சீரியல் நடிகை மேக்னா விவாகரத்திற்கு காரணம் நானா?....மனம் திறந்த நடிகர் விக்கி...!

சங்கவி மகளின் க்யூட் போட்டோஸை முதன் முறையாக பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சிலரோ இந்த வயதில் குழந்தையா?, குழந்தை பெற்றுக்கொள்ள ரொம்ப லேட் பண்ணிட்டீங்க? என்றும் தேவையில்லாத கேள்விகளை எல்லாம் கேட்டுள்ளனர். ஒருவர் இந்த வயதில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும், இப்போது தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது எல்லாம் அவர்களது தனிப்பட்ட விஷயம் என்பதை நெட்டிசன்கள் உணர்ந்தால் நன்றாக இருக்கும்.