Thalapathy Vijay G.O.A.T : தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தின் அடுத்த போஸ்டர் இப்பொது வெளியாகியுள்ளது. அந்த போஸ்டர் இந்த பொங்கலை அதிரடி பொங்கலாக மாற்றியுள்ளது.

லியோ திரைப்படத்தின் அதிரடி வெற்றியை தொடர்ந்து அடுத்தபடியாக தற்பொழுது தளபதி விஜய் அவர்கள் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக இணைந்து நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது, உலக அளவில் புகழ்பெற்ற "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (GOAT) என்கின்ற தலைப்புடன் தற்பொழுது இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. 

ஏற்கனவே சவுத் ஆப்பிரிக்கா, தாய்லாந்து மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் தற்போது சென்னையில் GOAT திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகிறது. அதே போல தொடர்ச்சியாக படக்குழு பல போஸ்டர்களை வெளியிட்டு தளபதி விஜய் அவர்களுடைய ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருவதும் அனைவரும் அறிந்ததே. 

இது வேட்டையன் பொங்கல்.. மாஸ் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - புதிய Colorful போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

அதேபோல படபிடிப்பு தளத்தில் தனது ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் தளபதி விஜய். இந்த நிலையில் இன்று பொங்கல் திருநாள் அன்று சிறப்பு போஸ்டர் ஒன்றை தளபதியின் GOAT திரைப்பட குழு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக வெளியான 2 போஸ்டர்களிலும் தளபதி விஜயின் இருவேறு கதாபாத்திரங்கள் குறித்த குறியீடுகள் மட்டுமே இருந்து வந்தது. 

ஆனால் இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்துவரும் பிரபல நடிகர்களான பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆகியோருடன் இணைந்து கையில் துப்பாக்கியுடன் தளபதி விஜய் அவர்கள் இருக்கும் ஒரு போஸ்டர் தற்பொழுது வெளியாகி உள்ளது. இதனை GOAT திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா வெளியிட்டுள்ளார். 

Scroll to load tweet…

அதே போல தளபதி விஜய் அவர்களும் இந்த போஸ்டரை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். GOAT திரைப்படம் இவ்வாண்டு இறுதியில் அல்லது 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல இந்த திரைப்படத்திற்கு பிறகு சுமார் இரண்டு ஆண்டுகள் தளபதி விஜய் அவர்கள் தனது நடிப்பிலிருந்து ஓய்வு பெற உள்ளதாகவும், முழு நேர அரசியல் பணிகளில் அவர் ஈடுபட உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்டம் எல்லாம் போதும்.. ஒரு பக்கா Commercial படம்.. களமிறங்கும் பிரபாஸ் - Raja Saab கம்மிங் சூன்!