Asianet News TamilAsianet News Tamil

எல்லாம் சிறப்பா முடிஞ்சுருச்சு.. ஹாயாக Vacation புறப்பட்ட நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ!

லியோ படத்திற்கான தனது படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளை முடித்துள்ள தளபதி விஜய் அவர்கள் அடுத்தபடியாக வெங்கட் பிரபு இயக்க உள்ள தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

Thalapathy Vijay Finished his schedule and dubbing for leo and now off to vacation photo viral in internet
Author
First Published Jul 24, 2023, 8:00 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் எஸ்.எஸ் லலித் குமார் தயாரித்து வெளியிடவுள்ள திரைப்படம் தான் லியோ. இந்த 2023ம் ஆண்டு துவக்கத்தில் இந்த படம் குறித்தான அறிவிப்பு வெளியானது, தளபதி விஜயின் 67வது திரைப்படமாக இது இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

அறிவிப்பு வெளியான சில மாதங்களிலேயே இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கியது, முதற்கட்ட படப்பிடிப்பு பல சவால்களை கடந்து கஷ்மீரில் படமாக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், பிரபல இயக்குனர்கள் ஆக்சன் கிங் அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், அனுராக் மற்றும் நடிகர், நடிகைகள் பிரியா ஆனந்த், பாபு ஆண்டனி, ஜார்ஜ் மரியான், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் என்று ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து முடித்துள்ளனர். 

அஜித்தின் ரீல் பேபி அனிகாவா இது? ஸ்ட்ராப் லெஸ் உள்ளாடை போன்ற ஆடையில்... உச்சகட்ட கவர்ச்சியில் அனிகா! போட்டோஸ்!

சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் முற்றிலும் முடிவடைந்ததை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்திற்கான VFX அமைக்கும் பணிகளுக்காக தற்பொழுது அவர் வெளிநாட்டிற்கு சென்று இருக்கிறார் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் தனது டப்பிங் பணிகளையும், படபிடிப்பு பணிகளையும் முடித்துள்ள தளபதி விஜய் அவர்கள் அடுத்தபடியாக வெங்கட் பிரபு இயக்க உள்ள தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த இடைப்பட்ட சில காலத்தில், ஓய்வெடுக்க தற்பொழுது முடிவு செய்து வெளிநாட்டுக்கு புறப்பட்டுள்ளார் விஜய். விமான நிலையத்தில் அவர் இருக்கும் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த மனசு தான் சார் கடவுள்! தன்னார்வ தொண்டு நிறுவன மூலம் 167 பள்ளிகளை தத்தெடுத்த பிரபல நடிகை.!

Follow Us:
Download App:
  • android
  • ios